சிவசங்கர் பாபா பள்ளி ஆசிரியைகள் தப்பியோட்டம்..!
சிவசங்கர் பாபாவின் பாலியல் குற்றங்களுக்கு உதவி செய்ததாக கூறப்படும் ஆசிரியைகள் தலைமறைவாக இருப்பது தெரிய வந்துள்ளது. கேளம்பாக்கம் சீர்காழி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது அந்த பள்ளி மாணவிகள் பாலியல் புகார் அளித்தனர்.
இதன் பேரில் மூன்று பேர் மீது வழக்கு பதியப்பட்டு இருமுறை கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இந்த நிலையில் சிவசங்கர் பாபா, உதவி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் பட்டியலை காவல்துறையினர் தயாரித்துள்ளனர்.
வரும் திங்கள்கிழமை முதல் பள்ளி ஆசிரியைகள், ஊழியர்கள், பக்தர்கள் ஆகியோரை வரவழைத்து விசாரணை நடத்த சிபிசிஐடி திட்டமிட்டு முதற்கட்டமாக 5 ஆசிரியர்களுக்கு சம்மன் அனுப்பினார்.
ஆனால் தனக்கு எந்த விதமான பதிலும் வராததால் அங்கு சென்று பார்த்தபோது அந்த பகுதியில் இருந்த அனைவரும் வீட்டை பூட்டி விட்டு தலைமறைவாகி இருப்பது தெரியவந்துள்ளது. முதற்கட்டமாக சிபிசிஐடி காவல்துறையினர் 3 பள்ளி ஆசிரியர்கள் உட்பட 5 பேரின் வீட்டில் குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் சம்மனை ஒட்டியுள்ளனர்.
வீட்டை பூட்டி விட்டு தலைமறைவாகி இருப்பதால் அனைவரையும் விசாரணை வளையத்தில் கொண்டு வந்து கைது நடவடிக்கையில் ஈடுபட போவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.






