தசம அடிப்படையில் மதிப்பெண்களை வழங்க அரசு முடிவு..!
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண்களை இரட்டை இலக்க தசம அடிப்படையில் வழங்க அரசு தேர்வுகள் இயக்ககம் முடிவு செய்துள்ளதால் கடந்த கல்வி ஆண்டுக்கான பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.
அதற்கு பதிலாக பதில் பத்து, பதினோராம் வகுப்பு மதிப்பெண்கள் மற்றும் 12ஆம் வகுப்பு மதிப்பீட்டில் செய்முறை தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் பொது தேர்வு மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு நாளை மறுநாள் வெளியாக உள்ளது.
இந்த அடிப்படையில் உதாரணத்திற்கு இயற்பியல் பாடத்தில் ஒரு மாணவரின் மதிப்பெண் கூட்டுத்தொகை 68.29 என்று வருகிறது என்றால் அந்த மாணவருக்கு 69 அல்லது 68 என்று வழங்காமல் 68.29 என்ற அடிப்படையில் அப்படியே வழங்கப்படும்.
ஏனென்றால் பொறியியல் உள்ளிட்ட உயர்கல்வி மாணவர் சேர்க்கை கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் நடக்கும்போது எந்த ஒரு மாணவரும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.






