கெட்டுப்போன 200 கிலோ மீன்கள் மற்றும் இறைச்சி பறிமுதல்..!
மதுரை அருகே உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இறைச்சி, மீன் கடைகளில் ஆய்வு மேற்கொண்டு கெட்டுப்போன 200 கிலோ மீன்கள் மற்றும் இறைச்சியை பறிமுதல் செய்தனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் அசைவ உணவு தான் பெரும்பாலான வீடுகளில் இடம் பெறும் எனவும் கொரொனா ஊரடங்கால் இறைச்சி கடைகளுக்கு மக்களின் வரத்து குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஊடகங்களில் இறைச்சியின் விலை அதிகரித்து காணப்படுகிறது.
இந்த நிலையில் உசிலம்பட்டியில் உள்ள இறைச்சி கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தலைமையிலான சுகாதாரத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் கெட்டு போன மீன்கள் மற்றும் கோழி இறைச்சி அதிகாரிகள் பறிமுதல் செய்து வியாபாரிகளுக்கு எச்சரித்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




