சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த கும்பல்..!
சத்தீஸ்கர் மாநிலத்தில் சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த கும்பலை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பல்ராம்பூர் எனும் இடத்தில் நடந்த இந்த கொடூர சம்பவத்தை அடுத்து போலீசார் அதிரடியாக நடவடிக்கை எடுத்து மூன்று சிறுவர்கள் உட்பட 5 பேரை பிடித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தி இருப்பதாக மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






