அஜீத் உடன் 10 படங்களில் கூட வில்லனாக நடிப்பேன் எனக்கூறிய விஜய் சேதுபதி..!
நடிக்க வேண்டும் என்று தோன்றினால் ஒன்று அல்ல பத்து படங்களில் கூட நடிகர் அஜித்துக்கு வில்லனாக நடிப்பேன் என விஜய் சேதுபதி அதிரடியாக தெரிவித்துள்ளார்.
நடித்தால் ஹீரோதான் என்ற எந்த ஈகோவும் இல்லாமல் படத்தின் முக்கிய கதாபாத்திரம், வில்லன், நிகழ்ச்சி தொகுப்பாளர் என அனைத்திலும் ஒரு கலக்கு கலக்கி வருபவர் நடிகர் விஜய்சேதுபதி.
மதிப்பான தோற்றத்தாலும், மாஸ் லுக்காலும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொள்ளை கொண்ட விஜய்சேதுபதிக்கு தற்போது பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என 26 படங்கள் கைவசம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அஜித்துக்கு வில்லனாக படத்தில் நடிப்பேன் என அவர் அதிரடியாக தெரிவித்துள்ளார்.






