--- --:--:-- --

திருவாடானை பாரத ஸ்டேட் வங்கி லோன் வாங்குவதற்கு நாயாக அலைய வேண்டி உள்ளது என பொதுமக்கள் குற்றச்சாட்டு..!

14

திருவாடானை பாரத ஸ்டேட் வங்கியில் கல்வி கடன் வாங்குவதற்காக பொதுமக்கள் பலர் விண்ணப்பங்கள் கொடுத்தும் கல்விக்கடன் வழங்கப்படுவதில்லை, என்றும் இறுதியில் கொடுக்கப்பட்ட விண்ணப்பங்கள் தொலைந்து விட்டது என்றும் வேறு ஏதாவது காரணங்கள் கூறி மனுக்களை நிராகரிப்பதை வழக்கமாக செய்து வருகின்றனர் என்றும் சொல்லப்படுகிறது.

 

இது பற்றி திருவாடானை அருகே கரையைகோட்டை கிராமத்தை சேர்ந்த ராமன் என்பவர் தனது மகள் கல்வி மேற்படிப்பிற்காக திருவாடனை பாரத் ஸ்டேட் வங்கியில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கல்விக் கடன் கேட்டு விண்ணப்பங்கள் கொடுத்திருந்த நிலையில் முதல் விண்ணப்பம் தொலைந்து விட்டதாகவும் மறுமுறை கொடுத்த விண்ணப்பம் தொலைந்ததாகவும், அதன் பிறகு கொடுத்த விண்ணப்பத்திற்கு ஒரு வருடத்துக்கு மேல் ஆகியும் நடவடிக்கை எடுக்காததால், முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு புகார் மனு கொடுத்து, அதன் பேரில் ராமநாதபுரம் முன்னோடி வங்கிக்கு விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் உள்ளது.

 

இந்நிலையில் இன்று 16ம் தேதி பாரத ஸ்டேட் வங்கியில் இருந்து ராமன் தனது மகளுக்கு கொடுத்த விண்ணப்பம் பெயரில் உரிய நடவடிக்கை எடுக்க முடியாது என்றும் ராமனுக்கு சிபிசி ஸ்கோர் சரியாக இல்லை என்றும் அதனால் நிராகரிக்கப்பட்டதாக கடிதம் அனுப்பப்பட்டது.

 

அந்த கடிதத்தில் விண்ணப்பத்தில் வங்கியின் பதிவு எண், தேதி எதுவும் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்துகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon