--- --:--:-- --

8 அடி நீள ராஜநாகத்திடம் இருந்து குழந்தையை காப்பாற்றிய தந்தை..!

1

வியட்நாம் நாட்டில் வீட்டின் வெளியில் அமர்ந்து குழந்தை ஒன்று விளையாடிக் கொண்டிருந்த நேரத்தில் குழந்தையின் தாத்தா எதையோ கண்டு திடீரென அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளார்.

 

உடனே சுதாரித்துக் கொண்ட குழந்தையின் தந்தை குழந்தையை தூக்கிக்கொண்டு வீட்டினுள் சென்று இருக்கும் போதே சுமார் எட்டடி நீளமுள்ள ராஜநாகம் ஒன்று வேகமாக வீட்டிற்குள் நுழைய முயற்சி செய்துள்ளது.

 

முன்பாகவே கதவுகள் பூட்டப்பட்டதால் அங்கும் இங்கும் அலைந்த ராஜநாகம் வீட்டை விட்டு வெளியேறியது. தற்போது வெளியாகியுள்ள இந்த வீடியோ இணையத்தில் அதிகம் பேரால் பார்க்கப்பட்டு வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon