--- --:--:-- --

முகக்கவசத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்த பெண்..!

3

சென்னையில் முக கவசத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்த பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். காசிமேட்டை சேர்ந்த திவ்யா என்ற பெண் மண்டபத்தில் வேலை பார்த்து வருகிறார்.

 

இவர் ஷேர் ஆட்டோவில் சென்ற போது கைக் குழந்தையுடன் பயணித்த பெண்ணொருவர் திவ்யாவுக்கு முககவசம் ஒன்றைக் கொடுத்து அணியுமாறு கூறுகிறார். இதை வாங்கி அணிந்து கொண்ட திவ்யா மயக்கமடைந்ததாக கூறப்படுகிறது. மயக்கம் தெளிவித்து அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon