பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று ஒன்றிய அமைச்சரவை கூட்டம்..!
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மாலை 5 மணிக்கு ஒன்றிய அமைச்சரவை கூட்டமும் இரவு 7 மணிக்கு அமைச்சர்கள் குழு கூட்டம் நடைபெறுகிறது. பிரதமர் மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு தனது இரண்டாவது முறையாக ஆட்சி அதிகாரத்திற்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைய உள்ளது.
ஆனால் இந்த இரண்டு ஆண்டுகளில் ஒருமுறை கூட ஒன்றிய அமைச்சரவை சபையில் மாற்றமும் செய்யப்படவில்லை. இந்த நிலையில் ஒன்றிய அமைச்சரவையில் மாற்றங்கள் செய்ய வசதியாக 12 அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர். 12 அமைச்சர்கள் பிரதமர் மோடியின் பரிந்துரையின் பேரில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டுள்ளார்.
அதை தொடர்ந்து புதிய அமைச்சர்களின் பதவியேற்பு விழா குடியரசு தலைவர் மாளிகையில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் புதிதாக 43 அமைச்சர்கள் பதவியேற்றனர்.
அவர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையில் இன்று ஒன்றிய அமைச்சரவை கூட்டம் இரவு 7 மணிக்கு அமைச்சர்கள் குழு கூட்டம் நடைபெறுகிறது.






