இரண்டு மாதங்களுக்குப் பிறகு அதிகரித்துள்ள கொரொனா பரவல்.!
இரண்டு மாதங்களுக்குப் பிறகு முதன்முறையாக கொரொனா பாதித்து சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 4 லட்சத்து 59 ஆயிரத்து 920 ஆக இருந்த இந்த எண்ணிக்கை நேற்று 4 லட்சத்து 60 ஆயிரத்து 704 ஆக உயர்ந்துள்ளது.
அதேபோன்று 24 மணி நேரத்தில் கொரொனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 43 ஆயிரத்து 733 இலிருந்து 45 ஆயிரத்து 792 ஆக உயந்துள்ளது. 174 மாவட்டங்களில் டெல்டா பிளஸ் வைரஸ் பரவுவதாக தகவல்கள் வரும் வேளையில் நோய்த்தொற்று அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது.
மகாராஷ்டிரா, டெல்லி, தெலுங்கானா, பஞ்சாப், மேற்கு வங்கம் மற்றும் குஜராத்தில் இந்த வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளன. அதே நேரம் கடந்த நான்கு வாரங்களில் 30 க்கும் மேற்பட்ட நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட லேம்டா வைரஸ் இந்தியாவில் பரவவில்லை.






