--- --:--:-- --

மனைவியை கொலை செய்து சடலத்தை மறைத்த வழக்கில் திருப்பம்..!

10

மனைவியை கொலை செய்து சடலத்தை மறைத்த வழக்கில் முன்னாள் ராணுவ வீரர்களும், போலீஸ்காரரான அவரது தம்பியையும் 2 நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

தேனி பாரஸ்ட் பகுதியை சேர்ந்த ஈஸ்வரன் மனைவி கிரிஜா பாண்டியை ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்தது அண்மையில் வெளிச்சத்திற்கு வந்தது. கொலை செய்து பிணத்தை தாய் மற்றும் தம்பி ஈஸ்வரன் உதவியுடன் முல்லை பெரியாற்றில் வீசியதாக ஈஸ்வரன் தனது வாக்கு மூலத்தில் தெரிவித்திருந்தார். ஆனால் முல்லை பெரியாற்றில் இரண்டு நாட்கள் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.

 

உண்மையில் பிணத்தை ஆற்றில் தான் வீசினார்களா அல்லது வேறு எங்கேயாவது புதைத்துவிட்டு பிணம் கிடைக்கக் கூடாது என்பதற்காக ஆற்றில் வீசியதாக நாடகமாடுகிறார்கள் என ஈஸ்வரன், சின்ன ஈஸ்வரன் 2 பேரையும் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon