கொரொனா இரண்டாவது அலையில் பாதிப்பு அதிகமான மாநிலங்கள்..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


கொரொனா இரண்டாவது அலையில் அதிக பாதிப்புக்களை சந்தித்த மாநிலங்களான கேரளாவும் மகாராஷ்டிராவும் பாதிப்புகளிலிருந்து மிகவும் மெதுவாகவே மீண்டு வருகின்றன.

 

கடந்த ஞாயிற்றுக்கிழமை உடன் முடிந்த வாரத்தில் தேசிய அளவில் தொற்று எண்ணிக்கை 11 சதவீதம் குறைந்தது. ஆனால் மகாராஷ்டிராவில் 4 சதவீதம் குறைவு மட்டுமே பதிவாகியுள்ளது. அதேநேரம் கேரளாவில் அந்த காலகட்டத்தில் புதிய தொற்றுக்களின் எண்ணிக்கை 7 சதவீதம் அதிகரித்துள்ளது.

 

குறிப்பிட்ட வாரத்தில் தேசிய அளவில் 3 லட்சம் பேருக்கு தொற்று ஏற்பட்டதில் அதில் 50 சதவீதம் கேரளா மற்றும் மஹாராஷ்ட்ராவில் ஏற்பட்டது.


Leave a Reply