ரேஷன் கடைகளில் தவறு நடந்தால் உடனடி நடவடிக்கை..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


ரேஷன் கடைகளில் பொருட்கள் காலாவதியாகி இருந்தால் அவற்றை உடனே திருப்பி அனுப்ப வேண்டும் என அதிகாரிகளுக்கு கூட்டுறவுத்துறை பதிவாளர் அறிவுறுத்தியுள்ளார்.

 

முதலமைச்சரின் 14 தொகுப்பு பொருட்களுடன் சில காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக ஒருசில மாவட்டங்களில் இருந்து புகார் வந்தது. மளிகை பொருட்களின் ஏற்கனவே இருப்பிலிருந்து தூள் பாக்கெட்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

 

இதுபோன்ற தவறுகளை தடுக்கும் விதமாக ரேஷன் கடைகளில் ஆய்வு மேற்கொள்ள செல்லும் அதிகாரிகள் டீத்தூள், பாமாயில் பாக்கெட்டுகளில் நாட்களை சரிபார்க்க வேண்டும் எனவும் நான் முடிவடைந்த பொருட்களை உடனுக்குடன் திருப்பி அனுப்ப வேண்டும் எனவும் கூட்டுறவுத்துறை பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.

 

தவறு நடந்தால் ரேஷன் கடைகள் ஆய்வாளர்களே பொறுப்பாவார்கள் எனவும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.


Leave a Reply