இன்று திருவாரூர் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்ற பிறகு முதன் முறையாக இன்று திருவாரூர் செல்கிறார். இதற்காக இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி செல்லும் ஸ்டாலின் அங்கிருந்து கார் மூலம் திருவாரூர் செல்ல உள்ளார்.

 

முதல் நிகழ்வாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் தாயார் அஞ்சலை அம்மாள் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்துகிறார். நாளை காலை திருவாரூர் அரசு மருத்துவமனையில் மகப்பேறு மையம் குழந்தைகள் நல சிகிச்சை மையத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்துவைக்க உள்ளார்.

 

பின்னர் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள் ஆலோசனை நடத்த உள்ளார். அதை தொடர்ந்து முதலமைச்சர் கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார்


Leave a Reply