மகள் கண்முன்னே தந்தையை அரிவாளால் தாக்கிய சம்பவம்..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகே நிலத்தகராறில் ஒருவர் அரிவாளால் தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சங்கரன்கோவில் அருகே உள்ள ஆட்கொண்டார்குளம் கிராமத்தை சேர்ந்தவர் தங்கராஜ்.

 

இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மருதையா என்பவருக்கும் கடந்த ஐந்து வருடங்களாக நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று தங்கராஜ் இடத்திற்கு வந்த மருதையாவை என்னுடைய இடத்திற்கு நீங்கள் வரக்கூடாது என வாக்குவாதம் செய்துள்ளனர்.

 

இந்த வாக்குவாதம் முற்றி மருதையா தான் கொண்டு வந்து இருந்த அரிவாளால் வெட்டியுள்ளார். அந்த காட்சியை செல்போனில் படம் பிடித்த தங்கராசுவின் மகள் தந்தை வெட்டப்பட்டதை கண்டு அலறி உள்ளார்.

 

அலறல் சப்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடிவர மருதையா அங்கிருந்து தப்பியோடினார். அரிவாளால் வெட்டும் வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


Leave a Reply