சந்திரமுகி பட வாய்ப்பை இழந்ததை நினைத்து பலமுறை அழுதுள்ளேன்..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


விர்க்க முடியாத காரணங்களால் சந்திரமுகி பட வாய்ப்பை இழந்ததை நினைத்து அழுது உள்ளதாக நடிகை சதா தெரிவித்துள்ளார். ஜெயம் படத்தின் மூலம் தாவணி தேவதையாக அறிமுகமான நடிகை சதா அந்த ஒரே படத்தின் மூலம் அனைவராலும் அறியப்பட்டதையடுத்து சங்கரின் அந்நியன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து முன்னணி நாயகியாக வலம் வந்தார்.

 

இந்த நிலையில் சந்திரமுகி படத்தில் நடிக்க தனக்கு இருமுறை அழைப்பு வந்ததாகவும் தவிர்க்க முடியாத காரணங்களால் அது நடக்க முடியாமல் போய்விட்டதாகவும் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

 

மேலும் அந்த படத்தை இழந்ததற்காக சில சமயங்களில் அழுது உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். சந்திரமுகி படத்தில் மாளவிகா கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக நடிகை சதா அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.


Leave a Reply