காதல் கணவரை வெட்டிக் கொலை செய்ய முயன்ற பெண்ணின் உறவினர்கள் கைது..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே காதல் கணவரை வெட்டிக் கொலை செய்ய முயன்ற பெண்ணின் உறவினர் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆறுமுகம், தாம்பரத்தில் ஏழுமலை என்பவரிடம் லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார்.

 

ஏழுமலையின் மகள் நந்தினியும், ஆறுமுகமும் காதலித்த நிலையில் கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டு உறவினர் வீட்டில் தங்கியுள்ளனர்.

 

கடந்த 1ஆம் தேதி இருவரும் கரடிபாக்கம் வந்தபொழுது நந்தினியின் உறவினர்கள் 4 பேர் ஆறுமுகத்தை காரில் கடத்தி சென்று கடுமையாக தாக்கி மலட்டாறு ஓரமாக வீசிச் சென்றுள்ளனர்.

 

நந்தினி அளித்த புகாரின் பேரில் ஆறுமுகத்தை மீட்ட காவல்துறையினர் விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். நந்தினியின் உறவினர்கள் 4 பேரையும் கைது செய்தனர்.


Leave a Reply