--- --:--:-- --

சூர்யாவின் 40வது படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் மீண்டும் தொடக்கம்..!

4

சூர்யா நடிக்கும் 40வது படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் மீண்டும் தொடங்க உள்ளது. பாண்டிராஜ் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. அதன்பிறகு கொரொனா ஊரடங்கு நடைமுறைக்கு வந்ததால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.

 

தற்போது தளர்வுகள் அமலுக்கு வந்துள்ளதால் அந்த படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளனர்.

 

அந்த வகையில் இன்னும் சில நாட்களில் காரைக்குடியில் நடைபெற உள்ள இதன் படப்பிடிப்பில் சூர்யா, பிரியங்கா உள்ளிட்ட பிரதான நடிகர்கள் அனைவரும் கலந்து கொள்கின்றனர். சூர்யாவின் பிறந்த நாளான ஜூலை 27ஆம் தேதி இந்த படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon