--- --:--:-- --

வாளியில் வைத்து கொடுக்கப்பட்ட குழந்தை உயிரிழப்பு..!

8

தேனி அரசு மருத்துவமனையில் இறந்ததாக வாளியில் வைத்து கொடுக்கப்பட்ட குழந்தை உயிருடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தது.

 

தாமரைக்குளம் பகுதியை சேர்ந்த பால வேந்திரன் ராஜா என்பவரின் மனைவி பாத்திமா மேரி. 6 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. கானாவிலக்கு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சுகப் பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது.

 

குறை பிரசவம் என்பதால் குழந்தை இறந்துவிட்டதாக கூறி வாளியில் அடைத்து மருத்துவமனை ஊழியர்கள் ஒப்படைத்துள்ளனர். குழந்தையை எடுத்துச் சென்ற இளைஞர் அடக்கம் செய்ய முயலும்போது இதயத் துடிப்பு இருந்தது தெரியவந்தது.

 

உடனடியாக மீண்டும் கானாவிளக்கு அரசு மருத்துவமனையில் குழந்தையை அழைத்து சென்று அனுமதித்தனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அந்த குழந்தையின் உயிர் பரிதாபமாக உயிரிழந்தது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon