தனியார் பள்ளிகளில் இலவச கல்வி சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


னியார் பள்ளிகளில் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஜூலை 5 முதல் ஆகஸ்ட் 3 வரை மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ள மெட்ரிக் பள்ளி இயக்குனர் கருப்புசாமி இணையதளத்தில் மாணவர் சேர்க்கை தொடர்பான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.

 

தகுதியான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 9ஆம் தேதி இணையதளத்திலும் பள்ளியின் தகவல் பலகையில் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார். பள்ளியின் தொடக்க நிலை வகுப்பு என்னவாக இருக்கிறதோ அதில் சேர்க்கை நடைபெறும் என்றும் கூறியுள்ளார்.

 

ஆகஸ்ட் 10-ஆம் தேதி குலுக்கல் முறையில் இடங்கள் ஒதுக்கப்படும் என்றும் தேர்வான மாணவர்கள் ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் பள்ளியில் சேர வேண்டும் என்றும் கருப்புசாமி குறிப்பிட்டுள்ளார்.


Leave a Reply