ஸ்மார்ட் செல்போன் மூலம் ஸ்கேன் செய்து கொரொனாவை கண்டறியலாம்..!
பொதுமக்களின் முகத்தை ஸ்மார்ட் செல்போன் மூலம் ஸ்கேன் செய்து கொரொனா தொற்றை கண்டறியும் நவீன முறை அபுதாபியில் அறிமுகம் செய்யப்பட்டது. இடிஐ எனப்படும் ஸ்கேனர்கள் மின்காந்த அலைகள் உதவியால் செயல்படக்கூடியது.
சில்வர் நிறத்திலான ரேடார் ஒன்றில் ஸ்கேன் செய்ய வேண்டிய இடத்தில் இருந்து 5 மீட்டர் தொலைவில் பொருத்தப்பட்டு அதன் தொடர்பு ஒரு ஸ்மார்ட் போனுடன் இணைக்கப்படும்.
அந்த செல்போனை வைத்து வணிக வளாகம் அல்லது கட்டிடத்திற்குள் வருவோரை காவலாளி அல்லது ஊழியரின் உதவியுடன் ஸ்கேன் செய்தால் ஒரு சில வினாடிகளில் அவருக்கும் கொரொனா உள்ளதா இல்லையா என்பதை அறிந்துகொள்ளமுடியும்.
பச்சை நிறமாக இருந்தால் கொரொனா இல்லை என்றும் சிவப்பு நிறமாக இருந்தால் கொரொனா உள்ளது என்று அர்த்தம் ஆகும். இதனை எதிர்த்து சிவப்பு நிறம் வந்தவர் 24 மணிநேரத்திற்குள் பிசிஆர் பரிசோதனை செய்ய பரிந்துரைக்கப்படும்.






