மர்மநபர் கொடுத்த மாத்திரையை வாங்கி சாப்பிட்ட பெண் பலி..!
ஈரோட்டில் கொரொனா பரிசோதனை செய்வதாக கூறி மர்மநபர் கொடுத்த மாத்திரையை வாங்கி சாப்பிட்ட பெண் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னிமலை அருகே உள்ள பெருமாள் மலை பகுதியை சேர்ந்தவர் கருப்பண்ணன். இவரின் மனைவி மல்லிகா. இவரது மகள் தீபா.
தன் குழந்தைகளுடன் தாய் வீட்டில் வசித்து வந்தார். இவர்களில் தோட்டத்தில் குப்பம்மா என்ற பெண் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று 25 வயதான இளைஞர் இவர்கள் வீட்டிற்கு வந்து கொரொனா பரிசோதனை செய்ய உள்ளதாக கூறியுள்ளார்.
அப்போது கருப்பு நிறத்தில் மாத்திரை ஒன்றை கொடுத்து அனைவரையும் சாப்பிடுமாறு கூறவே அவர்களும் அதை செய்து உள்ளனர்.
இதில் மாத்திரை சாப்பிடு நான்கு பேரும் மயங்கி விழவே உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மல்லிகா உயிரிழந்த நிலையில் மற்ற 3 பேரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.






