வகை 1 இல் உள்ள மாவட்டங்களுக்கான தளர்வுகள் என்னென்ன..?
தமிழகத்தில் கொரொனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஐந்தாம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வகை ஒன்றில் உள்ள 1 மாவட்டங்களுக்கான தளர்வுகள் – கோவை ,நீலகிரி, திருப்பூர், ஈரோடு , சேலம், திருவாரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்கள் உள்ளன.
இந்த 11 மாவட்டங்களுக்கு இடையே திருமணம் சார்ந்த பயணங்களுக்கு இ பாஸ் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வகை 2,3 இல் உள்ள மாவட்டங்களிலிருந்து வகை ஒன்றில் உள்ள மாவட்டங்களுக்கும் திருமணம் சார்ந்த பயணத்திற்கு இ பாஸ் கட்டாயம் என அரசு கூறியுள்ளது.
மேலும் இந்த 11 மாவட்டங்களில் தேனீர் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை பார்சல் சேவை மட்டும் அனுமதி அளித்தும், சாலையோரம் உணவு கடைகளிலும் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
கட்டுமான பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படலாம். அரசின் துறைகள் 100 சதவீத பணியாளர்களுடனும், இதர அரசு அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்கள் உடனும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் அனைத்து தனியார் அலுவலகங்கள் மற்ற நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்கள் உடனும் ஐஐடி மற்றும் ஐடி சேவை நிறுவனங்கள் 20 சதவீத பணியாளர்கள் உடனும் இயங்கலாம் என்று அரசு கூறியுள்ளது.
அரசு பூங்காக்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்கள், விளையாட்டுத் திடலில் காலை 6 மணி முதல் 9 மணி வரை நடை பயிற்சி காக்க மட்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மென்பொருட்கள், கல்வி புத்தகங்கள், பாத்திரக் கடைகள், பேன்ஸி செல்போன் கடைகள் உள்ளிட்டவை காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




