--- --:--:-- --

சிறுமியை கடத்தி அத்துமீற முயன்ற முதியவர் போக்சோவில் கைது..!

12

சென்னையில் சாலையில் நடந்து சென்ற சிறுமியை கடத்த முயன்ற முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். சென்னையில் 9 வயது சிறுமி வீட்டிற்கு மாவு வாங்கி கொண்டு சாலையில் நடந்து சென்றுள்ளார்.

 

அப்போது அந்த வழியாக வந்த சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த 56 வயதான முதியவர் முரளிதரன் வலுக்கட்டாயமாக சிறுமியை ஆட்டோவில் ஏற்றி உள்ளார். பின்னர் அந்த சிறுமியிடம் அவர் அத்து மீற முயன்றுள்ளார்.

 

அவரிடம் இருந்து தப்பிய சிறுமி தனக்கு நடந்ததை அங்கிருந்த பொதுமக்களிடம் கூறவே அவர்கள் முதியவரை மடக்கிப்பிடித்து தாக்குதல் நடத்தினர். பின்னர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட முரளிதரன் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

 

இவர் ஏற்கனவே இரண்டு வருடங்களுக்கு முன்பு சிறுமியிடம் அத்து மீறியதாக போக்சோவில் கைதானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon