120 ஆவது மாடியில் நடக்கும் விருந்தோம்பல்..!
120 ஆவது மாடியில் உணவகம், 24 மணி நேரமும் பட்லர் சேவை என மேகக் கூட்டங்களிடையே சொகுசு விருந்தோம்பல் தரும் ஹோட்டல் சீனாவின் ஷங்காய் நகரில் திறக்கப் பட்டுள்ளது.
உலகின் இரண்டாவது உயரமான கட்டிடமான சுவரின் மேல் தளங்களில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஹோட்டலில் 160 அறைகள், 7 உணவகங்கள், 84 நீச்சல் குளம் என உயர்ந்த நட்சத்திர ஹோட்டலுக்கு உரிய அனைத்து அம்சங்களும் உள்ளது.
உயரம் அதிகம் என்றாலும் கண்ணிமைக்கும் நேரத்தில் மேல் தளம் செல்ல இங்கு 18 மீட்டர் என்ற வேகத்தில் செல்லும் லிப்ட்களை வைத்துள்ளனர்.
முதல் நாளில் திறப்பு விழா சலுகை கட்டணம் அறிவிக்கப்பட்டாலும் ஒருநாள் இரவு தங்க சுமார் பத்தாயிரம் டாலர்கள் வரை வசூலிக்கப்படுகிறது. இருப்பினும் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் ஆர்வம் காணப்படுவதாகவும் அந்த நிர்வாகம் கூறியுள்ளது.






