திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது..!
உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத 9 மாவட்டங்களில் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடித்து முடிவுகளை அறிவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உள்ளாட்சித் தேர்தலுக்கு ஆயத்தம் ஆகும் வகையில் அது தொடர்பாக ஆலோசிக்க திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது.
அந்த கட்சியின் தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு க ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் மாலை 5 மணிக்கு கூட்டம் தொடங்குகிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு முதன் முறையாக அந்த கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.






