நடிகர் விஜய்யை வெரி கூல் எனக்கூறிய நடிகர் ஷாருக்கான்..!
நடிகர் விஜயை பற்றி ஒரு வார்த்தையில் சொல்லுங்கள் என ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பாலிவுட் நடிகர் ஷாருக்கான் வெரி கூல் என தெரிவித்துள்ளார். நடிகர் ஷாருக்கான் திரையுலகில் அறிமுகமாகி இன்றுடன் 29 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.
இதனையொட்டி நடிகர் ஷாருகான் ரசிகர்களுடன் டுவிட்டரில் கேள்வி பதில் மூலம் உரையாடினார். விஜய் ரசிகர் ஒருவர் அவரது பீஸ்ட் போஸ்டர் குறித்து ஒரு வார்த்தை சொல்லுங்கள் என்றார்.
அதற்கு ஷாருக்கான் உடனடியாக வெரி கூல் என்று பதிலளித்துள்ளார். விஜய் ரசிகரின் இந்த கேள்விக்கான பதில் ட்விட்டர் முழுக்க வைரலாகி வருகிறது.






