--- --:--:-- --

அதிகமாக பரவும் டெல்டா பிளஸ் வகை வைரஸ்..!

12

காராஷ்டிரா, கேரளா, மத்திய பிரதேசம் மாநிலங்களில் டெல்டா பிளஸ் வகை வைரஸ் அதிகமாக பரவி வருவதால் அந்த தடுப்புப் பணிகளை வேகமாக மேற்கொள்ள வேண்டும் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

இந்தியாவில் டெல்டா பிளஸ் வகை வைரஸ் உருவாகியுள்ளதாகவும் இதனால் மூன்றாம் அலை பரவும் வாய்ப்பு உள்ளதாகவும் மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர். இந்த நிலையில் கவலை அளிக்கக்கூடியதாக மகாராஷ்டிரா, கேரளா மற்றும் மத்திய பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

 

இதுகுறித்து ஒன்றிய குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவில் இதுவரை 22 பேருக்கு டெல்டா பிளஸ் வகை வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதில் 16 பேர் மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் மற்றும் கேரளா மாநிலங்களை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவித்துள்ளது.

 

ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள பொது சுகாதார தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரமாக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon