ஊரடங்கு தளர்வு குறித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று ஆலோசனை..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


மிழகத்தில் ஊரடங்கு தளர்வு குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ள நிலையில் தோற்று குறைந்த 27 மாவட்டங்களில் பொது போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

தமிழகத்தில் தற்போது அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 21ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில் மேலும் பல தளர்வுகள் அளிப்பது குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

 

தலைமை செயலகத்தில் இன்று காலை 11 மணிக்கு நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் மருத்துவ நிபுணர்கள் மக்கள் நல்வாழ்வு உள்ளிட்ட பல்துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இந்த கூட்டத்தில் கூடுதல் பொறுப்புகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.

 

அதன்படி தொடர்ந்து 27 மாவட்டங்களில் பொது போக்குவரத்துக்கு அனுமதி வழங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சிறிய ஜவுளி கடைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் கடைகளுக்கான நேர் அனுமதியை நீட்டிப்பது உள்ளிட்ட தலைவர்கள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 


Leave a Reply