மனநலம் பாதிக்கப்பட்ட தம்பியிடம் இருந்து சொத்துக்களை அபகரித்துக் கொண்ட அக்கா..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


னநலம் பாதிக்கப்பட்ட தம்பியிடம் இருந்து சொத்துக்களை அபகரித்துக் கொண்டு அவரை வீட்டை விட்டு துரத்தி அனாதையாக விடப்பட்ட சோக சம்பவம் கன்னியாகுமரியில் அரங்கேறியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் மேலூர் பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் மனநலம் பாதிக்கப்பட்டவர்.

 

இவரது சகோதரி மதிஷா கல்லூரி காலத்தில் ரமேஷ் அன்பகத்தான் காதல் ஏற்பட்டு பெற்றோர் எதிர்ப்பை தாண்டி திருமணம் செய்ததாக தெரிகிறது. அதன்பின் இரண்டு குழந்தைகளுக்கு தாயான மதிஷா சிரமப்படுவதை கண்ட அவரது தாய் சரஸ்வதி தங்களது சொத்து 31 சென்ட் நிலத்தை மகளுக்கும், உள்ள 30 சென்ட் நிலத்தை மகனுக்கும் எழுதி வைத்துள்ளார்.

 

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தாய் சரஸ்வதி உயிரிழந்துள்ளார். இதனால் மதிஷாவும், அவரது கணவரும் சேர்ந்து மனநலம் பாதிக்கப்பட்டுள்ள ஜெனிசிடம் கையெழுத்து பெற்று மொத்த சொத்துக்களையும் வளைத்துப் போட்டுள்ளனர்.

 

எல்லாவற்றுக்கும் மேலாக ஜெனிஸ் தங்குவதற்கு இடம் கூட கொடுக்காமல் வீட்டைவிட்டு துரத்திவிட்டார். தந்தை தாய் பராமரிப்பில் ராஜா போல் வாழ்ந்த இளைஞர் மழையிலும் ஒதுங்க கூட இடம் இல்லாமல் உள்ளதை கண்ட பொதுமக்கள் அவ்வப்போது உணவு வழங்கி செல்கின்றனர்.


Leave a Reply