--- --:--:-- --

சிறுவர்களை தாக்கிய கருப்பு பூஞ்சை நோய்..! அதிர்ச்சியில் மருத்துவர்கள்..!

2

கர்நாடகாவில் சிறுவர்களுக்கு கருப்புப் பூஞ்சைநோய் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

கொரொனா தொற்று ஏற்பட்ட பெல்லாரி மாவட்டத்தை சேர்ந்த 11 வயது சிறுமிக்கும், சித்ரதுர்கா பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவனுக்கும் கருப்புப் பூஞ்சை பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் இருவரும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

அங்கு இருவரின் உடல் நிலை மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது. கொரொனா தாக்கிய ஒருசிலருக்கு கருப்பு பூஞ்சை நோய் இருப்பதும் இதுவரை பெரியவர்களுக்கு மட்டுமே இந்த பாதிப்பு இருந்தது தெரிய வந்தது. தற்போது இந்த நோயால் சிறுவர்களும் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon