--- --:--:-- --

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்ய இன்று விசாரணை..!

1

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கின் மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறுகிறது. கொரொனா இரண்டாவது அலை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட இந்த தேர்வுகள் அடுத்த மாதம் அல்லது ஜூலை மாதம் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

இது தொடர்பாக நாளை சிபிஎஸ்இ நிர்வாகம் ஆலோசனை நடத்த உள்ள நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை வழக்கமான முறையில் நடத்துவதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

 

இந்த மனு இன்று விசாரணைக்கு வர உள்ளது. அனைத்து மாநிலங்களிலும் சிபிஎஸ்சி பிளஸ் டூ தேர்வு ரத்து செய்யுமாறு கோரிக்கைகள் எழுந்துள்ளன. இந்த நிலையில் பொதுநல மனு விசாரணைக்கு வரவிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

 

இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என மனுதாரர் ஏற்கனவே கேட்டது குறித்தும் என்று முடிவெடுக்கப் படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon