--- --:--:-- --

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மற்றொரு ஆசிரியர் மீது புகார்..!

8

சென்னையில் ஆன்லைன் வகுப்புகளில் மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்ட நிலையில் மற்றொரு பள்ளியில் பாலியல் தொந்தரவு ஆசிரியர் மீது மாணவர்கள் புகார் அளித்துள்ளனர் .

 

சேத்துப்பட்டு பகுதியில் மகரிஷி வித்யாலயா தனியார் பள்ளியில் ஆசிரியர் ஆனந்திற்கு எதிராக முன்னாள் மாணவர்கள் பாலியல் புகார்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு பின்னர் முன்னாள் மாணவர்கள் பலரும் சேர்ந்து குழந்தைகள் உரிமைக்கான பாதுகாப்பு ஆணையம் மகளிர் ஆணையம் உயர்கல்வித்துறை செயலாளர் பள்ளி நிர்வாகம் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

 

இதன் அடிப்படையில் ஆசிரியர் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேர்மையாகவும் வெளிப்படைத் தன்மையுடனும் நடத்தும் வகையில் குழு அமைக்கப்படும் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon