டெல்லி பல்கலைக்கழகத்தில் ஒரே மாதத்தில் 35 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உயிரிழப்பு..!
டெல்லி பல்கலைக்கழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 35க்கும் அதிகமான ஆசிரியர்கள் உயிரிழந்துள்ளனர். டெல்லி பல்கலைக்கழக ஆசிரியர்கள் கூட்டமைப்பு வெளியிட்டிருக்கும் அறிக்கையில் பல்கலைக்கழகத்திற்கு கீழ் உள்ள ஒவ்வொரு கல்லூரியிலும் சுமார் மூன்று ஆசிரியர்கள் உயிரிழந்திருப்பதாக தெரிவித்துள்ளது.
குறிப்பாக தற்காலிகமாக பணியாற்றும் ஆசிரியர்களின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளதாகவும் அவர்களுக்கான மருத்துவ வசதிகளை விரிவாக்கம் செய்து தரப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது.
இதேபோன்று டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் உள்ளிட்ட முக்கிய பல்கலைகழகங்களில் பணியாற்றும் பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் அதிக அளவு தற்போது பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




