--- --:--:-- --

தன்னை 52 முறை ஏலியன்ஸ் கடத்தியுள்ளதாக கூறும் பெண்..!

4

ங்கிலாந்தை சேர்ந்த பெண் ஒருவர் வேற்றுகிரகவாசிகள் தன்னை 52 முறை கடத்தியதாக கூறி அதிர்ச்சியடைய செய்துள்ளார். கற்றது கை மண்ணளவு கல்லாதது உலகளவு என்பார்கள். ஆனால் அறிவியலையும் விஞ்ஞானத்தையும் பொருத்தவரை மனிதகுலம் இன்னும் மண்துகள் அளவு கூட கற்கவில்லை என்பது தான் உண்மை.

 

அண்ட சராசரத்தில் இருக்கும் பல கோடான கோடி பால் வீதிகளில் ஒரு சிறிய புள்ளி தான் நமது சூரிய குடும்பம். இந்த சூரிய குடும்பத்தில் உள்ள ஒரு தூசி தான் பூமி.

 

இந்த பிரகாசமான பால்வெளி அண்டத்தில் பூமியில் மட்டும் தான் மனிதர்கள் இருக்கிறார்களா இல்லை பிற கிரகங்களிலும் ஏலியன்கள் எனப்படும் வேற்று கிரகவாசிகள் வசிக்கின்றனரா போன்று கேள்விகள் பல ஆண்டுகளாக நம்மை விடாமல் தொடர்ந்து வருகின்றன.

 

இந்த நிலையில் பவுலா என்கிற பெண் ஏலியன்கள் தன்னை 52 முறை கடத்தி உள்ளதாக கூறியுள்ளார். மேலும் ஏலியன்ஸ் கடத்திய போது தனக்கு காயங்கள் ஏற்பட்டதாகவும் அதற்கான தழும்புகள் இருப்பதாகவும் கூறி அதிர வைத்துள்ளார்.

 

ஏலியன்ஸ் தன்னை கடத்தும் போது எந்தவித அறிகுறிகளையும் தன்னால் உணர முடியாது என்றும் தெரிவித்துள்ளார். 1982 ஆம் ஆண்டு ஏலியன்கள் தன்னை முதன்முதலாக கடத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon