--- --:--:-- --

மகளின் உடலை 35 கி.மீ. தூரம் தூக்கிச் சென்ற தந்தை..!

3

மத்திய பிரதேசத்தில் தற்கொலை செய்துகொண்ட சிறுமியின் உடலை உடற்கூறாய்வு செய்வதற்கு அவரின் தந்தை 35 கிலோமீட்டர் தூரம் தூக்கி சென்றுள்ளார். சிங்ரவல்லி மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.

 

இதையடுத்து அவரது உடலை உடற்கூறு ஆய்வு செய்து வரும்படி அப்பகுதி போலீசார் கூறியுள்ளனர். வாகனத்தை ஏற்பாடு செய்வதற்கு போதிய பணம் இல்லாததால் சிறுமியின் உடலை அவரது தந்தை சில உறவினர்களுடன் கட்டிலில் சுமந்து சென்றார்.

 

அவர்கள் கிட்டத்தட்ட 35 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சிங்ரோலி மருத்துவமனைக்கு சுமார் 7 மணி நேரம் நடந்து சென்றனர். இதுகுறித்து வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon