அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு..!
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அந்த மையத்தின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
5, 6 தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ஈரோடு, திருப்பூர், தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் ஏழு எட்டாம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் தென்மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னையில் அடுத்த இரு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் அதிகபட்ச வெப்பநிலை 96.8 டிகிரி ஃபாரன்கீட் ஆகவும் குறைந்தபட்ச வெப்பநிலை என்பது 82 டிகிரி ஃபாரன்ஹீட் ஆகவும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளா, கர்நாடகா பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.






