கொரொனா அதிகமுள்ள மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகளா..? இன்று ஆலோசனை..!
தமிழகத்தில் கொரொனா அதிகம் உள்ள மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் தேவையா என்பது குறித்து தலைமைச் செயலாளர் இன்று ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார்.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, தேனி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று பரவல் அதிகமாக இருக்கக்கூடிய சூழலில் தமிழகத்தில் கொரொனா பரவலை கட்டுபடுத்த கூடுதல் கட்டுப்பாடுகள் தேவையா என்பது உள்ளிட்ட ஆலோசனை நடைபெற இருக்கிறது.
பல்வேறு கடைகள் திறப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மே மாதத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக தொற்று அதிகம் உள்ள ஒரு சில மாவட்டங்கள் உடன் தலைமைச் செயலாளர் இன்று நேரடியாக ஆலோசனை மேற்கொள்கிறார். அதன்படி காணொலிக் காட்சி மூலம் இந்த ஆலோசனையில் ஈடுபட இருக்கிறார்.






