--- --:--:-- --

17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்கள்..!

8

சென்னையில் 17 வயது சிறுமியை மிரட்டி பல நாட்களாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். எட்டாவது வரை மட்டுமே படித்த 17 வயது சிறுமி வீட்டில் இருந்துள்ளார்.

 

இந்தநிலையில் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி இளைஞர்கள் சிலர் காட்டுப் பகுதி மற்றும் தனி அறைக்கு அழைத்து சென்று அவ்வப்போது பாலியல் கொடுமை செய்துள்ளனர். இதனால் கருத்தரித்த சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று 18 வயது நிரம்பிய தாகக் கூறி கருக்கலைப்பு செய்துள்ளனர்.

 

மீண்டு வந்த சிறுமியை நண்பர்களுக்கு அறிமுகம் செய்து அவர்களும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இது தொடர்பாக வெளியில் சொன்னால் குடும்பத்தோடு கொலை செய்து விடுவதாகவும் இளைஞர்கள் மிரட்டியுள்ளனர்.

 

இந்த நிலையில் இது குறித்து அறிந்த சமூக ஆர்வலர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட கார்த்திக் மணிகண்டன் ஆகியோரை கைது செய்த காவல்துறையினர் தனசேகரன் என்பவரை தேடி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon