--- --:--:-- --

வாக்கு எண்ணிக்கையின்போது பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகளை அறிவித்தது தேர்தல் ஆணையம்..!

9

வாக்கு எண்ணிக்கையின்போது பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகளை அறிவித்தது தேர்தல் ஆணையம். 5 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

 

வாக்கு எண்ணும் மையங்களுக்கு வெளியே மக்கள் கூட்டமாக கூடக்கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வாக்கு எண்ணிக்கையின் போது வாக்கு இயந்திரங்கள் கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யப்படவேண்டும்.

 

வேட்பாளர்கள் முகவர்களிடம் கொரொனா தொற்று இல்லை என சான்றிதழ் கட்டாயம் இருக்க வேண்டும். காய்ச்சல், சளி அறிகுறிகளுடன் வரும் நபர்களுக்கு வாக்கு எண்ணும் மையங்களில் அனுமதி இல்லை. வாக்கு எண்ணும் மையங்களுக்கு வருவோருக்கு உடல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

 

வாக்கு எண்ணும் மையங்கள் பெரியதாகவும், உரிய இடவசதியுடனும் இருக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon