--- --:--:-- --

மருத்துவமனையில் படுக்கை கிடைக்காமல் மூச்சுத்திணறி உயிரிழந்த ஒன்றரை வயது குழந்தை..!

7

ந்திர மாநிலத்தில் கொரொனாவால் பாதிக்கப்பட்ட ஒன்றரை வயது குழந்தையின் மருத்துவமனையில் படுக்கை கிடைக்காமல் ஆம்புலன்சில்  உயிரிழந்த சோகம் திகழ்ந்துள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்த ஒன்றரை வயது குழந்தைக்கு ஒரு வாரமாக சளி மற்றும் காய்ச்சல் ஏற்பட்டிருந்தது.

 

குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதையடுத்து பெற்றோர் விசாகப்பட்டினத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதால் குழந்தையை சேர்த்துக்கொள்ள தனியார் மருத்துவமனை மறுத்துவிட்டது.

 

சந்தேகத்தின் பேரில் குழந்தைக்கு பரிசோதனை மேற்கொண்ட போது தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து விசாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் குழந்தையை அழைத்து வந்தனர். ஆனால் அங்கு ஆக்சிஜன் கூடிய படுக்கைகள் அனைத்தும் நிரம்பியதால் படுக்கைகாக குழந்தை ஆம்புலன்சில் காத்திருந்தது.

 

கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் காத்திருந்த குழந்தையை எப்படியாவது காப்பாற்றி விடலாம் என மருத்துவமனை முன்பு காத்திருந்த சங்கீதாவின் பெற்றோர் கண்ணீருடன் கதறிய காட்சி காண்போரை கலங்க செய்தது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon