--- --:--:-- --

டெல்லியில் கொரொனா பரவலால் ஒரு வாரம் முழு ஊரடங்கு அமல்..!

7

கொரொனா பரவலை கட்டுப்படுத்த டெல்லியில் ஒரு வாரம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரொனாவின் இரண்டாவது அலை பல்வேறு மாநிலங்களில் மிக வேகமாக பரவி வருகிறது.

 

குறிப்பாக வட மாநிலங்களான குஜராத், டெல்லி, உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கொரொனா தீவிர தன்மையை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அந்தந்த மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. இந்த நிலையில் ஒரு வாரம் ஊரடங்கு தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது.

 

முதலமைச்சர் கெஜ்ரிவால் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். தினசரி பாதிப்பு 25 ஆயிரத்தை கடந்து இருக்கக்கூடிய நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

கொரொனாவை கட்டுப்படுத்தியே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் டெல்லி அரசு இருப்பதால் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. எனவே டெல்லியில் இன்று இரவு முதல் ஒருவாரத்திற்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon