--- --:--:-- --

டாஸ்மாக் கடைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள்..!

9

கொரொனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. டாஸ்மாக் கடைகளில் கூட்டம் நெரிசல் இருக்கக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறது.

 

இரு வாடிக்கையாளர்களுக்கு இடையே 6 அடி இடைவெளி கண்டிப்பாக கடைபிடிக்கப்பட வேண்டும் என தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. டாஸ்மாக் கடைகளில் மாஸ்க் அணிந்து வந்தால் மட்டுமே மதுபானங்கள் விற்பனை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

டாஸ்மாக் பணியாளர்கள் முகக்கவசம் மற்றும் கையுறை அணிய வேண்டும். சானிடைசர் வைத்து கட்டாயம் அதை பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon