திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்..!
கொரொனா தொற்று காரணமாக பல்லாவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
காட்பாடி தொகுதியில் திமுக வேட்பாளர் துரைமுருகனுக்கு கடந்த 8ஆம் தேதி கொரொனா தொற்று கண்டறியப்பட்டது. இதனையடுத்து ஏப்ரல் 10-ஆம் தேதி சிகிச்சைக்காக அவர் பல்லாவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பரிசோதனையில் அவருக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை என்று கடந்த 11ஆம் தேதி மருத்துவ குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் துரைமுருகன் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பியுள்ளார்.






