--- --:--:-- --

கொரோனா பரவல் காரணமாக சென்னையில் இன்று முதல் சிறப்பு முகாம்- 200 வார்டுகளிலும் காய்ச்சல் பரிசோதனை!!

202104081150292305_1_1coronavirustest._L_styvpf

தமிழகத்தில் கடந்த ஆண்டை போல கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது.

 

கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் உச்சத்தை தொட்ட கொரோனா தொற்று பின்னர் படிப்படியாக குறைந்தது. இதனால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

 

இதன் பின்னர் இயல்பு நிலை திரும்பியது. மக்கள் வழக்கம் போல பணிகளை தொடங்கினார்கள். முக கவசம் அணியாமல் பல்வேறு நிகழ்ச்சிகளில் கூட்டம் கூட்டமாக பங்கேற்றனர்.

 

இதன் காரணமாகவே கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை, தஞ்சாவூர், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே நோயின் தாக்கம் அதிகரித்து வந்தது.

 

குறிப்பாக சென்னையில் தினசரி பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. கடந்த வாரம் ஆயிரத்தை தொட்ட தினசரி பாதிப்பு நேற்று 1,500-ஐ எட்டி இருக்கிறது.

 

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 1,459 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 2½ லட்சத்தை தாண்டி உள்ளது.

 

நேற்று மாலை சுகாதாரத்துறை வெளியிட்ட புள்ளி விவரப்படி சென்னையில் 2 லட்சத்து 57 ஆயிரத்து 581 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இவர்களில் 2 லட்சத்து 42 ஆயிரத்து 880 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 10,685 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தமிழகம் முழுவதும் நேற்று 17 பேர் உயிரிழந்துள்ள நிலையில் சென்னையில் மட்டும் 6 பேர் பலியாகி இருக்கிறார்கள்.

 

இதையடுத்து சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த மாநகராட்சி சார்பில் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

கடந்த சில நாட்களாகவே நோய் பரவலை கட்டுப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த நிலையில் தேர்தல் காரணமாக பல்வேறு இடையூறுகள் இருந்து வந்தன.

 

இந்த நிலையில் தேர்தல் முடிந்து மாநகராட்சி அதிகாரிகள் அனைவரும் கொரோனாதடுப்பு பணிகளில் முழுமையாக ஈடுபட தொடங்கி உள்ளனர். இதையடுத்து இன்று முதல் சென்னையில் வீடு வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon