--- --:--:-- --

வரதட்சணை தராததால் மருமகளை நிர்வாணமாக்கி தாக்கி விட்டு தலைமறைவான மாமியார்..!

3

டிசாவில் போதிய வரதட்சணை தராத மருமகளை நிர்வாணமாக்கி தாக்கி விட்டு தலைமறைவான மாமியாரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. ஒடிஷா மாநிலம் கேந்திரபாரா மாவட்டத்தில் 24 வயதுள்ள பெண் ஒருவர் போதிய வரதட்சணை கொடுக்காததால் மாமியாரால் நிர்வாணமாக்கப்பட்டு தாக்கப்பட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரபரப்பை ஏற்படுத்தியது.

 

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் மாமா உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

 

பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தை போலீஸார் பதிவு செய்துள்ளனர். குற்றம்சாட்டப்பட்ட மாமியார் கிராமத்தை விட்டு வெளியேறி விட்டதால் அவரை பிடிக்க தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon