--- --:--:-- --

கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம் வாபஸ்..!

6

காவிரி விவகாரம் தொடர்பாகக் கர்நாடக மாநிலத்தில் நடைபெற்று வந்த முழு அடைப்புப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். விவசாயிகளின் கோரிக்கைகளைப் பரிசீலித்து, அவற்றை நேர்மையான முறையில் தீர்க்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

 

 

முன்னதாக, காவிரி நீர்ப்பங்கீடு தொடர்பான இந்த எதிர்ப்பில் வாட்டாள் நாகராஜ் தலைமையில் பல்வேறு கன்னட அமைப்பினர் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுப் பின் கைது செய்யப்பட்டனர். மாண்டியா, மைசூரு ஆகிய பகுதிகளில் காலிக் குடங்களுடன் போராட்டம் நடைபெற்ற நிலையில், அசம்பாவிதங்களைத் தவிர்க்க ஈரோட்டில் இருந்து கர்நாடகாவுக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்துகள் முன்னெச்சரிக்கையாக ரத்து செய்யப்பட்டன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon