கர்ப்ப காலத்தில் தாய் போட்ட கொரொனா தடுப்பூசியால் குழந்தைக்கு நேர்ந்தது என்ன..?
ஸ்பெயினில் கொரொனா நோய் எதிர்ப்பு சக்தியுடன் குழந்தை ஒன்று பிறந்தது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.ஸ்பெயினின் ஒரு தீவில் உள்ள மார்க்ரெட் என்ற மருத்துவமனையில் கடந்த வாரம் ஒரு தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது.
அப்போது குழந்தையின் தொப்புள் கொடி பரிசோதனை செய்யப்பட்டது. குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி இயற்கையாக உருவாகி இருப்பதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இதன்மூலம் இந்த குழந்தையின் இயல்பான நோய் எதிர்ப்பு சக்தி உடன் பிறந்த முதல் குழந்தை என்று ஆகிவிட்டது.
குழந்தையின் தாய்க்கு கர்ப்ப காலத்தின் கடைசி மூன்று மாதங்களில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அந்த தடுப்பூசி குழந்தையிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தனர் அந்த மருத்துவமனை நிர்வாகத்தினர். அந்த குழந்தைக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட அவர்களுக்கு நிகரான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதை சுட்டிக் காட்டியுள்ளனர்.
மேலும் இந்த நேரத்தில் குழந்தைக்கு முழுமையாக கொரொனாவில் இருந்து இயற்கையான பாதுகாப்பு கிடைத்துள்ளது. ஆனால் அது எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது இன்னும் தெரியவில்லை என்றும் கூறியுள்ளனர்.






