இரு கால்களோடு டெல்லியிலும் வெற்றி பெறுவேன்..!
உடைந்த ஒரு காலோடு மேற்கு வங்கத்தில் வெற்றி பெறும் நான் எதிர்காலத்தில் இரு கால்களோடு டெல்லியிலும் வெற்றி பெறுவேன் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது.
இரு கட்டங்களாக தேர்தல் முடிவடைந்திருக்கும் நிலையில் நாளை 3வது கட்டமாக 31 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. நந்திகிராம் தொகுதியில் போட்டியிடும் முதலமைச்சர் வேட்பு மனு தாக்கலின் போது காயமடைந்தார்.
ஒரு காலில் கட்டுடன் இருக்கும் அவர் மேற்கு வங்க முழுவதும் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். பரப்புரை கூட்டத்தில் பேசிய அவர் தற்போது ஒரு காலுடன் மேற்கு வங்கத்திலும் எதிர்காலத்தில் இரு கால்களுடன் டெல்லியிலும் வெற்றி பெறுவேன் என்றார்.
மேற்குவங்கத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடத்துவதற்கான காரணத்தை கேள்வி எழுப்பியபோது திரிணாமுல் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளில் இருந்து வந்தவர்களே பாஜக சார்பில் போட்டியிடுகின்றனர் என்றார். பணத்தை தண்ணீராய் செலவழிக்கும் பாஜக தேர்தலில் கட்டாயமாக வெற்றி பெற முடியாது என்றும் அவர் சூளுரைத்தார்.






