ஏப்ரல் 8ஆம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை..!
கொரொனா தொற்று நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிலையில் ஏப்ரல் 8ஆம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்துகிறார். தமிழகம், மகாராஷ்டிரா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் கொரொனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஆலோசனை நடைபெறுகிறது.
தடுப்பூசி போடும் பணியை விரைவுபடுத்துவது குறித்தும் இந்த ஆலோசனை கூட்டத்தில் விரிவாக விவாதிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.






